ரகித ராஜபக்ஷவின் வீட்டுக்கு திடீரென சென்ற இலஞ்ச ஊழல் விசாரணை அதிகாரிகள்!

0
26

முன்னாள் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவின் மகனான ரகித ராஜபக்ஷவின் வீட்டுக்கு இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று நேற்று (28) இரவு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ரகித ராஜபக்ஷவின் சொத்துக்கள் தொடர்பான விசாரணைக்காகவே, ராஜகிரிய பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்புத் தொகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு அதிகாரிகள் சென்றுள்ளனர்.

எனினும், அந்த நேரத்தில் ரகித ராஜபக்ஷவும் அவரது சாரதியும் தமது கையடக்கத் தொலைபேசிகளைச் செயலிழக்கச் செய்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறியிருந்ததாகக் கூறப்படுகிறது.

இதன்போது, ரகித ராஜபக்ஷவின் தந்தையான விஜேதாச ராஜபக்ஷவும் தனது மகனைத் தேடுவதற்காக அவரது நண்பர்களுக்குத் தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டுள்ளார். எனினும், அந்த முயற்சியும் வெற்றியளிக்கவில்லை எனத் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பாதாள உலகக் குழுத் தலைவர் ஒருவரிடமிருந்து 12 கோடி ரூபாய் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், 2025 ஜூன் 25ஆம் திகதி ரகித ராஜபக்ஷ கைது செய்யப்பட்டிருந்தார். இதனையடுத்து, சுமார் ஒரு மாத காலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர், தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here