பிணை வழங்கிய தீர்மானத்துக்கு எதிரான மனுக்கள் பெப்ரவரி 9ஆம் திகதி விசாரணைக்கு

0
38

போதைப்பொருள் கடத்தல்காரராகக் கருதப்படும் நதுன் சிந்தக விக்ரமரத்ன அல்லது ‘ஹரக் கட்டா’ என்பவரின் மனைவியிடம் இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ரகித ராஜபக்ஷ மற்றும் சரித் அபேசிங்க உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களுக்குப் பிணை வழங்கி கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை வலுவிழக்கச் செய்யக் கோரி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட மீளாய்வு மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, குறித்த மனுக்கள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 9ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மீளாய்வு மனுக்கள், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லால் பண்டார முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இதன்போது சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களைப் பரிசீலித்த நீதிபதி, பிரதிவாதிகளின் ஆட்சேபனைகளை நவம்பர் 14ஆம் திகதியும், மனுதாரர்கள் தரப்பின் ஆட்சேபனைகளை நவம்பர் 28ஆம் திகதியும் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here