ஐக்கிய தேசியக் கட்சியின் ஐந்து முன்னணித் தலைவர்களை நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியலிலிருந்து ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களை நீக்கி அவர்களுக்கு பதிலாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகளை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பாராளுமன்றத்தில் பிரதமராக தனித்து செயற்படக் கூடாது எனவும், அவருக்கு அமைச்சரவையில் பலமான பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் எனவும் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, பல மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற தேசிய அரசாங்கப் பேச்சுவார்த்தையில் இந்த பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளதாக லங்கா நியூஸ் வெப் தெரிவித்துள்ளது