தேசிய மக்கள் சக்தியின் (NPP) ஆட்சியிலுள்ள பதியத்தலாவ பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு 06 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேச சபையின் தவிசாளர் இரண்டாவது முறையாகவும் நேற்று (27) வரவு செலவுத் திட்டத்தை சபையில் சமர்ப்பித்தபோது இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதன்போது, வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக 13 வாக்குகளும், ஆதரவாக 07 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இதேவேளை, கடந்த 18ஆம் திகதி முதன்முறையாக சபையில் சமர்ப்பிக்கப்பட்ட குறித்த வரவு செலவுத் திட்டம் 05 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
