சமூக செயற்பாட்டாளரும் இலங்கையின் யூடியூபருமான ரெட்டா எனப்படும் ரத்திந்து சுரம்ய சேனாரத்னவுக்கு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
சேனாரத்ன நேற்று பிற்பகல் கொம்பனிதெரு பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
மே 09 அன்று காலி முகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டியில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கடந்த 25 ஆம் திகதி, கோட்டை நீதிமன்றங்களுக்கு முன்பாக கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில், கொம்பனிதெரு பொலிஸாரால் இவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.