வைத்தியசாலையில் டிக்கெட் வெட்டிய துமிந்த சில்வா மீண்டும் வைத்தியசாலையில்

Date:

கைது செய்யப்பட்ட பின்னர் சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த துமிந்த சில்வா, நேற்று (03) பிற்பகல் வைத்தியசாலையில் இருந்து விடுவிக்கப்பட்ட போதிலும், அவர் மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வைத்தியசாலையின் 18வது வார்டில் சிகிச்சை பெற்று வந்த துமிந்த சில்வா நேற்று காலை வைத்தியசாலையில் இருந்து வெளியேறிய போதிலும், சுகவீனம் காரணமாக மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொதுமன்னிப்பு வழங்கியிருந்த போதிலும், அவர் தாக்கல் செய்த மனுவையடுத்து உச்ச நீதிமன்றத்தினால் பொதுமன்னிப்பு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தோண்டத் தோண்ட வரும் மனித எலும்புக் கூடுகள்!

யாழ்ப்பாணம், செம்மணியின் நேற்றைய அகழ்வின் போது 5 என்புத் தொகுதிகள் புதிதாக...

தேசிய தலைவருக்கு விளக்கு கொழுத்தவுள்ள யாவருக்கும் வணக்கம்

“விடிய விடிய இராமர் கதை, விடிந்த பின் இராமர் சீதைக்கு என்ன...

ரணிலுக்கு அதிர்ச்சி கொடுக்கும் நீதிமன்ற தீர்ப்பு

2022  ஜூலை 17,   அன்று அப்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால்...

இன்றைய வானிலை

இன்றையதினம் (23) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை...