தம்மிக்க பெரேரா பாராளுமன்றம் வருவதில் சட்ட சிக்கல்

Date:

பிரபல வர்த்தகரான தம்மிக்க பெரேராவை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு சட்டரீதியாக தடை ஏற்பட்டுள்ளது.

தம்மிக்க பெரேரா பல வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளராகவும், பணிப்பாளர் சபை உறுப்பினராகவும் இருப்பதால், அவர் பாராளுமன்ற உறுப்பினராவதற்கு முன்னரே அவற்றை விட்டு விலகியிருக்க வேண்டும்.

அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்ற உறுப்பினராக உள்ள ஒருவருக்கு சொந்தமான நிறுவனம் அரசாங்கத்துடன் டீல் செய்தால் அந்த ஆசனம் இரத்து செய்யப்படும்.

தம்மிக்க பெரேரா அமைச்சர் பொறுப்பை ஏற்பார் என்று முன்னர் வெளியான தகவல்களின் காரணமாக அவரது பல வர்த்தக நிறுவனங்களின் பங்குகள் கடுமையாக உயர்ந்துள்ளன.

எவ்வாறாயினும், தம்மிக்க பெரேரா தொடர்பான சட்ட சிக்கல்கள் தீர்க்கப்படும் என சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, நாட்டின் அதிகாரம் மிக்க அமைச்சு ஒன்றை அவருக்கு வழங்குவதற்கு தயார்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முதலீட்டுத் துறை அமைச்சராக அவர் பதவியேற்பார் என்று உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.

தற்போது ஜனாதிபதியின் கட்டுப்பாட்டில் உள்ள பல விடயங்களும் அவரது அமைச்சுக்குள் சேர்க்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வத்திக்கான் வெளியுறவு அமைச்சர் இலங்கை வருகிறார்

வத்திக்கான்  வெளியுறவு அமைச்சர் பேராயர் பால் ரிச்சர்ட் கல்லாகர்  எதிர்வரும் நவம்பர்...

பத்மேவுடன் தொடர்பு – ஐந்து நடிகைகளுக்கு சிக்கல்

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேகநபரான கெஹெல்பததர பத்மே உடன் வெளிநாடுகளுக்குச்...

இலங்கை பெண்கள் நால்வர் சடலங்களாக மீட்பு

சென்னை எண்ணூர் பெரிய குப்பம் கடற்கரையில் நான்கு பெண்களின் சடலங்கள் கரை...

எரிபொருள் விலை மாற்றம்

மாதாந்த எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைய, நேற்று (31) நள்ளிரவு 12.00...