புதிய மத்திய வங்கி ஆளுநர் தொடர்பில் ஜனாதிபதியிடம் பிரதமர் விடுத்துள்ள கோரிக்கை

0
236

மத்திய வங்கியின் ஆளுநராக தினேஷ் வீரக்கொடியை நியமிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதிக்கு கோரிக்​ை விடுத்துள்ளார்.

மத்திய வங்கியின் தற்போதைய ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவின் பதவிக்காலம் இம்மாத இறுதியில் நிறைவடையவுள்ளது.

தினேஷ் வீரக்கொடி பிரதமரின் பொருளாதார ஆலோசகராகவும், வங்கிகளின் முன்னாள் தலைவராகவும் இருந்துள்ளார்.

நந்தலால் வீரசிங்கவுக்கும் பிரதமருக்கும் இடையில் கருத்து மோதல் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இலங்கை மத்திய வங்கி அதனை நிராகரித்துள்ளது.

எனினும் பிரதமரின் கோரிக்கைக்கு ஜனாதிபதி இதுவரை சாதகமான பதிலை வழங்கவில்லை. அமைச்சு இலாகாக்களை வர்த்தமானியில் வெளியிடும் போது இலங்கை மத்திய வங்கி நிதியமைச்சிற்கு கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here