எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ திருகோணமலை வரலாற்று சிறப்புமிக்க கோணேஸ்வரம் ஆலயத்திற்கு இன்று (04) காலை விஜயம் செய்தார்.
அங்கு இடம்பெற்ற சமய நிகழ்வுகளில் கலந்து கொண்டு ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொண்டார்.
எதிர்க்கட்சித் தலைவரின் எண்ணக்கருவில் அமைந்த ” பிரபஞ்சம் ” நிகழ்ச்சித் திட்டம் திருகோணமலை மாவட்டத்தை மையப்படுத்தி இடம்பெற்று வருகின்றது.
இதில், ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப், ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சி முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
சஜித் பிரேமதாஸ திருகோணமலை மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பல்வேறு நிகழ்வுகளிலும் நாளை (06) வரை கலந்து சிறப்பிக்கவுள்ளார்.