அனைத்து உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரிப்பு

0
148

இலங்கையில் உணவுப்பொதிகள், கொத்துரொட்டி உட்பட ஏனைய அனைத்து உணவுப் பொருட்களின் விலைகளும் 10 வீதத்தால் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த விடயத்தை அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சிற்றுண்டிகள், கொத்து மற்றும் உணவுப்பொதிகள் என்பவற்றின் விலைகளே 10 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளன.நுகர்வோர் மற்றும் விற்பனையாளர்களுக்கு உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் எரிபொருட்களின் விலைகள் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளதாக இன்று அதிகாலை அறிவிக்கப்பட்டிருந்தது. 

இதற்கமைய, இன்று அதிகாலை 2 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்தே உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here