இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இந்தியாவின் பெற்றோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் வீடமைப்பு மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சர் ஸ்ரீ ஹர்தீப் சிங் பூரியைபுதுடெல்லியில் உள்ள நகர விவகார அமைச்சில் சந்தித்தார்.
குறிப்பாக பெட்ரோலியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வழங்கிய 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவிக்கும் மேலதிகமாக, கடந்த ஆண்டு டிசம்பரில் இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்சவின் இந்திய விஜயத்தின் போது ஒப்புக் கொள்ளப்பட்ட ஒத்துழைப்புக்கான நான்கு தூண்களின் கீழ் இந்தியா இலங்கைக்கு வழங்கிய உதவிகளுக்கு உயர்ஸ்தானிகர் மொரகொட அமைச்சர் பூரிக்கு நன்றிகளைத் தெரிவித்தார். இலங்கையின் பெற்றோலியப் பங்குகளை மேம்படுத்துவதற்கு இந்தியாவினால் மேலதிக உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.
பெட்ரோலியப் பொருட்களின் விநியோகம் மற்றும் நாட்டின் எரிசக்தித் துறையில் அவற்றின் தாக்கம் தொடர்பாக இலங்கை தற்போது எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் அமைச்சர் பூரிக்கு உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட விளக்கமளித்தார். தற்போதைய நெருக்கடியை சமாளிக்க இந்தியாவும் இலங்கையும் பெற்றோலியத் துறையில் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து உயர்ஸ்தானிகரும் அமைச்சரும் கலந்துரையாடினர்.
பெட்ரோலியம், எண்ணெய், எரிவாயு மற்றும் சம்பந்தப்பட்ட கப்பல் போக்குவரத்துத் துறைகளில் இலங்கை நீண்டகால மூலோபாய உறவுகளை ஏற்படுத்துவதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகள் உட்பட எரிசக்தித் துறை தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் இந்தக் கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டது.
அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அரசியலில் இணைவதற்கு முன்னர் ஒரு புகழ்பெற்ற தொழில் தூதுவராக விளங்கினார். அவர் 1984 - 1988 காலப்பகுதியில் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் பணியாற்றினார்.
இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,
புது தில்லி
இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, ஜனாதிபதி செயலகம் முன்பாக வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்தியாவசிய பொருட்களின் விலைகளை அதிகரித்துள்ள அரசாங்கத்திற்கு எதிராக அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வாழ்க்கைச் செலவை அரசாங்கம் தாங்க...
இன்றைய தினமும்(15) மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி P,Q,R,S,T,U,V மற்றும் W ஆகிய வலயங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி...
பசில் ராஜபக்ஷ நிதி அமைச்சராக நியமிக்கப்பட்ட பின் இருந்ததும் இல்லாமல் போய்விட்டதாகவும் அரசாங்கத்தை உருவாக்கிய அனைவருக்கும் பொது மக்கள் இடிவிழக் கோருவதாகவும் நாரஹேன்பிட்டி அபயராமய விகாராதிபதி, கொழும்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முருந்தெட்டுவே...
வட மாகாண மனிதாபிமான உதவித்திட்டம் மற்றும் யாழ்ப்பாணத்தில் செயற்கைக்கால் பொருத்தும் முகாமின் ஆரம்பம் வடமாகாணத்திலுள்ள மீனவர்கள் மற்றும் அவர்களின்குடும்பத்தினருக்கான மனிதாபிமான உதவிகளை வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் ஒன்று, இலங்கை மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ்...