Tamil

மின் பாவனையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

மறு அறிவித்தல் வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க இன்று (31) தெரிவித்தார். மின்சாரத்தை துண்டிப்பதா இல்லையா என்பதை தீர்மானிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று பிற்பகல்...

சஜித் அணிக்கு அமோக வெற்றி

நிவித்திகல பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்காக நடைபெற்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி குழு அதிகூடிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தி குழு தனது 38 பிரதேசங்களில்...

யாழ்ப்பாணத்தில் கறுப்பு ஜனவரி கவனயீர்ப்பு

ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை, காணாமல் ஆக்கப்பட்டமை, தாக்கப்பட்டமை மற்றும் ஊடக நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுத்து, நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நகரில் இன்றைய...

அடக்குமுறைகளுக்கு எதிரான போர்க்குரல் ‘ஷியாம் சிங்கா ராய்’!

நானி நடிப்பில் உருவான ‘ஷியாம் சிங்கா ராய்’ தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத்தில் கடந்த டிசம்பர் 24ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்தப்படம் தற்போது ஓடிடியில் சக்கை போடு போட்டு வருகிறது. ராகுல் சங்க்ரித்யன் இயக்கத்தில் நிஹாரிகா என்டர்டெயின்மென்ட்டின் தயாரிப்பாளர் வெங்கட் பொயனப்பள்ளி இந்தப்படத்தை தயாரித்துள்ளனர். இதுவரை வெளியான நானி படங்களிலேயே மிகவும் அதிக பொருட்செலவில் இந்தப்படம் வெளியாகியுள்ளது சமூகத்தில் நிலவும் சாதிய ஏற்றத்தாழ்வு, பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராக கர்ஜிக்கும் படமாக இந்தப்படத்தைகொண்டாடுகின்றனர் ரசிகர்கள். தெலுங்கில் மசாலா படங்களை மட்டுமே பார்த்து ரசித்த தமிழ் ரசிகர்களுக்கு  'ஷியாம் சிங்கா ராய்' படம் ஆச்சரியத்தை அளித்துள்ளது. மறுஜென்மம் கதையில் தேவதாசி முறை ஒழிப்பு, சாதிய ஏற்றத்தாழ்வுக்கு எதிரான கலகக்குரல் என பலவற்றை  திரைக்கதையாக்கியுள்ளனர். “எந்த பொண்ணும் யாருக்கும் தாசி கிடையாது. தனக்கு தாசி வேணும்னு நினைச்சா அது     கடவுளே கிடையாது. கடவுளோட போர்வையில இருக்கிறவங்க நடத்துற அயோக்கியத்தனம் இது. ஆத்மார்த்தத்தைவிட  எந்த ஆகமும் பெரிசு கிடையாது” போன்ற வசனங்கள் படம் முழுவதும் பார்வையாளனுக்குள் பலவித       கேள்விகளை எழுப்புகிறது.சாய் பல்லவியின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. டிசம்பர் மாதம் திரையரங்கில்  வெளியான படம் தற்போது ஓடிடி தளமான நெட் ஃபிளிக்ஸில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. 'ஷியாம் சிங்கா ராய்' படம் நெட் ஃபிளிக்ஸில் அதிகமான பாரவையாளர்களால் பார்க்கப்பட்ட லிஸ்டில் உலகளவில்  மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. இந்திய அளவில் முதல் இடத்தை பெற்றுள்ளது. இதனை நானி ரசிகர்கள்  கொண்டாடி வருகின்றனர். 

ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரு துண்டு நிலம் உரிமமாக இருக்க வேண்டும் – சஜித் கருத்து

நாட்டில் வாழும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரு துண்டு நிலத்தில் உரிமை இருக்க வேண்டும் எனவும், சில அரசியல் நயவஞ்சகர்கள் இதற்கு எதிராக இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். இந்நாட்டில் பாடசாலை செல்லும்...

Popular

spot_imgspot_img