Tamil

லிட்ரோ மற்றும் லாப் எரிவாயு உற்பத்திகள் மூலப்பொருளின்றி இடைநிறுத்தம்

லிட்ரோ மற்றும் லாப் எரிவாயு நிறுவனங்கள் எரிவாயு உற்பத்தி மற்றும் விற்பனை செயற்பாடுகளை இடைநிறுத்தியுள்ளதாக எரிவாயு நிறுவனத் தலைவர்கள் அறிவித்துள்ளனர் சமையல் எரிவாயு உற்பத்தி செய்வதற்கான எரிவாயு சரக்குகளை இன்னும் பெறாத காரணத்தினாலேயே இம்முடிவு...

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சிய இலங்கையில் விலை குறைப்பு சாத்தியமா ?

உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக கடுமையாக உயர்ந்து வந்த கச்சா எண்ணெய் விலை தற்போது மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது. கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 100 அமெரிக்க டொலர்களால் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கிடையில், உலகெங்கிலும் உள்ள...

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சி

நாட்டின் முன்னணி உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின் அடிப்படையில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. மக்கள் வங்கி, இலங்கை வங்கி, கொமர்ஷல் வங்கி...

நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் (வேட கரன அபே விருவா) ஜனாதிபதியின் உரை இன்று

நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (மார்ச் 16) இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.

இந்திய பெற்றோலிய வளத்துறை அமைச்சருடன் மிலிந்த மொரகொட பேச்சு

இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இந்தியாவின் பெற்றோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் வீடமைப்பு மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சர் ஸ்ரீ ஹர்தீப் சிங் பூரியைபுதுடெல்லியில் உள்ள நகர விவகார அமைச்சில் சந்தித்தார். குறிப்பாக பெட்ரோலியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வழங்கிய 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவிக்கும் மேலதிகமாக, கடந்த ஆண்டு டிசம்பரில் இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்சவின் இந்திய விஜயத்தின் போது ஒப்புக் கொள்ளப்பட்ட ஒத்துழைப்புக்கான நான்கு தூண்களின் கீழ் இந்தியா இலங்கைக்கு வழங்கிய உதவிகளுக்கு உயர்ஸ்தானிகர் மொரகொட அமைச்சர் பூரிக்கு நன்றிகளைத் தெரிவித்தார். இலங்கையின் பெற்றோலியப் பங்குகளை மேம்படுத்துவதற்கு இந்தியாவினால் மேலதிக உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன. பெட்ரோலியப் பொருட்களின் விநியோகம் மற்றும் நாட்டின் எரிசக்தித் துறையில் அவற்றின் தாக்கம் தொடர்பாக இலங்கை தற்போது எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் அமைச்சர் பூரிக்கு உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட விளக்கமளித்தார். தற்போதைய நெருக்கடியை சமாளிக்க இந்தியாவும் இலங்கையும் பெற்றோலியத் துறையில் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து உயர்ஸ்தானிகரும் அமைச்சரும் கலந்துரையாடினர். பெட்ரோலியம், எண்ணெய், எரிவாயு மற்றும் சம்பந்தப்பட்ட கப்பல் போக்குவரத்துத் துறைகளில் இலங்கை நீண்டகால மூலோபாய உறவுகளை ஏற்படுத்துவதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகள் உட்பட எரிசக்தித் துறை தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் இந்தக் கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டது. அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அரசியலில் இணைவதற்கு முன்னர் ஒரு புகழ்பெற்ற தொழில் தூதுவராக விளங்கினார். அவர் 1984 - 1988 காலப்பகுதியில் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் பணியாற்றினார். இலங்கை உயர்ஸ்தானிகராலயம், புது தில்லி

Popular

spot_imgspot_img