உலகம்

தொடர்ந்தும் இலங்கையுடன் இணைந்திருப்போம் – கனடா உறுதி

பொருளாதார மீட்சியை நோக்கிய இலங்கையின் பயணத்தில் நாம் தொடர்ந்தும் இலங்கையுடன் இணைந்திருப்போம் என இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான கனடா உயர்ஸ்தானிகர் எரிக் வொல்ஷ் தெரிவித்துள்ளார். கனடா கூட்டமைப்பின் 156ஆவது ஆண்டினை நினைவுகூரும் வகையில் இன்று...

இலங்கை தமிழர், மலையக தமிழர், அகதிகள் குறித்து பாரதிய ஜனதா கட்சிக்கு மூன்று முக்கிய கோரிக்கை

பாரதீய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஸ்ரீ கே அண்ணாமலை 23-06-2023 அன்று ஐக்கிய இராச்சியத்திற்கு விஜயம் செய்து உலகளாவிய தமிழ் சிவில் சமூகம் மற்றும் 600,000 பேர் கொண்ட பிரித்தானிய...

செந்தில் தொண்டமான் குறித்து லண்டன் தமிழர்கள் மத்தியில் அண்ணாமலை கருத்து

கிழக்கு மாகாண புதிய ஆளுநர் செந்தில் தொண்டமானின் நியமனம் தமிழ் மக்களின் பெரும்பாலான முக்கிய பிரச்னைகளை தீா்க்கும் என்ற நம்பிக்கையை உருவாக்கியுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பிரிட்டன் நாடாளுமன்றத்தில் உள்ள ஹவுஸ்...

புதிய ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு உள்நாட்டு மற்றும் உலகத் தலைவர்களிடம் இருந்து குவியும் வாழ்த்து!

இலங்கையின் கிழக்கு மாகாண ஆளுநராக பதவியேற்றுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமானுக்கு உள்நாட்டு மற்றும் வௌிநாட்டுத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன...

ஜெசுவந்தினி மருத்துவ மனையின் 2022 ஆம் ஆண்டு நடுநின்றிணைத்தல் சிறப்பாரத்தைப் பெற்றுள்ளார் 

தெற்கு நோர்வே பல்கலைக்கழக மருத்துவமனையின் (SUS) 2022ஆம் ஆண்டிற்கான நடுநின்றிணைத்தல் சிறப்பாரத்தை "Formidlingsprisen", அங்கு உடனடி மனநல மருத்துவப் பிரிவில் பணியாற்றும் மருத்துவ  மேலாளரான ஜெசுவந்தினி மயூரன் பெற்றுள்ளார். பல ஆண்டுகளாக ஏரண  (விவாதப்) பதிவுகள் மற்றும் நாளிதழ்கள் மூலம் தனது அடையாளம்,  பண்பாட்டுப் பின்னணி மற்றும் மனநலம் தொடர்பான தலைப்புகளை  ஈடுபாட்டுடன் பரப்பியதற்காக இந்த சிறப்பாரம் அவருக்கு வழங்கப்பட்டது. மேற்கூறப்பட்ட தெரி-செய்தித் தொடர்பு மூலம், ஜெசுவந்தினி முன்னர் அதிகம் ஏரணம் செய்யப்படாத  முதன்மையான தலைப்புகளில் கவனத்தை ஈர்க்க முடிந்தது. சிறுபான்மைப் பின்னணி கொண்டவர்கள் மனநலப் பராமரிப்பைக் கையாளும் போது  எதிர்கொள்ளக்கூடிய அறைகூவல்கள் குறித்து அதிக விழிப்புணர்வை  ஏற்படுத்த மருத்துவ மேலாளராக தனது பதவியைப் பயன்படுத்தியுள்ளார்.  மனநலப் பணிக்கான மிகவும் உள்ளடக்கிய மற்றும் மாறுபட்ட  அணுகுமுறையை ஊக்குவிப்பதில் அவரது பணி பங்காற்றியுள்ளது. ஜெசுவந்தினி அவர்கள் தான் சிறப்பாரம் பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார். எழுதுவது தனது வேலையின் ஒரு முதன்மை கூறு  என்றும், அது கவனிக்கப்படும்போது கூடுதல் நன்றாக இருப்பதாகவும் அவர் கூறுகிறார். இந்த சிறப்பாரம் அவரது எழுத்துத் திறமையை மட்டும் ஒப்பளி (அங்கீகரி)க்கவில்லை, ஆனால் மனநலப் பாதுகாப்பில் முதன்மையான  தலைப்புகளில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான அவரது  முயற்சிகளையும் ஏற்றுக்கொள்கிறது. மொத்தத்தில், ஜெசுவந்தினி மயூரன் தனது மொழி இன நிற அடையாளம்,  பண்பாடு பின்னணி மற்றும் மனநலம் பற்றிய புரிதலையும் விழிப்புணர்வையும் அதிகரிக்க குறிப்பிடத்தக்க முயற்சியை மேற்கொண்டுள்ளார் என்பது தெளிவாகிறது. அவரது கவர்ச்சிகரமான தெரி-செய்தித் தொடர்பு பாணியால், சிறுபான்மைப் பின்னணி கொண்டவர்கள் மனநலப்  பராமரிப்பைக் கையாளும் போது எதிர்கொள்ளக்கூடிய அறைகூவல்களைப் பற்றிய சிறந்த புரிதலை உருவாக்குவதற்கு அவர் பங்களித்துள்ளார்,  இதற்காக அவர் பெறும் அனைத்து ஒப்பளித்தலுக்கும் தகுதியானவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Popular

spot_imgspot_img