முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரிடம் விசாரணை நடத்த குற்றப்புலனாய்வு திணைக்களம் தயாராகி வருகிறது.
கடந்த அரசாங்கத்தின் சுகாதார அமைச்சராக இருந்த கெஹலிய ரம்புக்வெல்ல மருந்து இறக்குமதியின் போது செய்ததாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பிலான விசாரணைகள் தொடர்பில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ரணில் விக்கிரமசிங்க இலங்கை திரும்பிய பின்னர் இந்த வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி அவர்கள் வசிக்கும் இடங்களுக்குச் சென்று வாக்குமூலங்களைப் பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.