சிறுபான்மை தமிழ் கட்சிகளின் முயற்சியில் திடீர் திருப்பம்!

Date:

சிறுபான்மை தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து இந்திய பிரதமருக்கு அனுப்ப தயாரித்த ஆவணத்தை இறுதிப்படுத்துவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கு பிரதான காரணம் தயாரிக்கப்பட்டுள்ள வரைபை இலங்கை தமிழரசு கட்சி நிராகரித்துள்ளமையாகும்.

இலங்கை தமிழரசுக்கட்சி மீள் திருத்தப்பட்ட வரைவினை முழுமையாக நிராகரித்துள்ள நிலையில் அக்கட்சியை தவிர்த்து விட்டு ஏனைய தமிழ் பேசும் கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்டு கூட்டு ஆவணத்தினை அனுப்புவதா இல்லையா என்பது தொடர்பில் கட்சிகளின் தலைவர்கள் கூடிப்பேசவுள்ளனர். இந்தக் கூட்டம் எப்போது நடைபெறும் என்பது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை.

இதன்போது தமிழரசுக் கட்சியின் தீர்மானம் தொடர்பில் பரிசீலனை செய்யப்படவுள்ளதோடு அக்கட்சியை தவிர்த்து விட்டுச் செல்வதா இல்லையா என்பது குறித்தும் இறுதியான தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

இதேநேரம், செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் ஆகியோர் மீண்டும் சம்பந்தன், விக்னேஸ்வரன் ஆகியோருடன் சந்திப்புக்களைச் செய்யவுள்ளதோடு மனோ கணேசன், ஹக்கீம் ஆகியோரும் இச்சந்திப்பில் பங்கேற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, தமிழரசுக்கட்சியை தவிர்த்து விட்டு பிரதமர் மோடிக்கு கூட்டு ஆவணத்தினை அனுப்புவதாக இருந்தால் எந்த வரைவினை இறுதி செய்வது என்பது தொடர்பில் கேள்விகள் உள்ளன.

அதாவது, ஏற்கனவே ரெலோவினால் தயாரிக்கப்பட்ட ஆரம்ப வரைவில் கையொப்பமிடுவதாக இல்லை. நேற்று முன்தினம் சுமந்திரனின் இல்லத்தில் ஹக்கீம் தரப்பின் பங்கேற்புடன் இறுதி செய்யப்பட்ட ‘தமிழ் பேசும் மக்களின் அபிலாஷைகளுக்கான ஆட்சி அதிகாரப் பகிர்வு’ என்ற வரைவினை இறுதி செய்வதா என்பது தொடர்பிலும் கட்சித்தலைவர்கள் அவதானம் செலுத்தவுள்ளனர்.

அதேநேரம், சம்பந்தனையும், தமிழரசுக்கட்சியையும் உள்ளீர்த்து பிரதமர் மோடிக்கு அனுப்பு கூட்டு ஆவணத்தை இறுதி செய்வதாக இருந்தால் கட்சித்தலைவர்கள் அனைவராலும் கடந்த 21ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்பட்ட 7 பக்கங்களைக் கொண்ட ‘தமிழ் பேசும் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதும் இலங்கை இந்திய ஒப்பந்தமும்’ என்ற வரைவினை இறுதி செய்வதாக இருந்தால் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ், மனோகணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியவற்றுக்கு காணப்படுகின்ற கரிசனைகள் தொடர்பில் அவதானம் செலுத்துவதற்கு வாய்ப்புக்கள் உள்ளனவா என்பது குறித்தும் பரிசீலிக்கப்பட வேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

உலக வங்கி – இலங்கை அரசாங்கம் இடையே ஐந்தாண்டு திட்டம் கைச்சாத்து

உலக வங்கி குழுமமும், இலங்கை அரசாங்கமும் இணைந்து புதிய ஐந்தாண்டு கூட்டாண்மை...

பிள்ளையான் விளக்கமறியலில்

கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதல்வர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) வழக்கு தீர்ப்பு...

இந்தோனேசிய கடற் பகுதியில் பாரிய நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் வடக்கு மொலுகா கடற்பகுதியில் 7.4 மெக்னிடியூட் அளவில் பாரிய நிலநடுக்கம்...

IMF ஒப்பந்தம் காரணமாக மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியாது

சர்வதேச நாணய நிதியம் (IMF) உடன் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தத்தின் காரணமாக, 2028...