பிள்ளையான் விளக்கமறியலில்

0
213

கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதல்வர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) வழக்கு தீர்ப்பு கிடைக்கும் வரை விளக்கமறியலில் வைக்க கல்கிசை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களம் (CID) அவரை ஒரு ஆண்டுக்கு மேல் கைது செய்து விசாரணையில் வைத்திருந்தது. நேற்று (02) அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதனையடுத்து, சட்ட ஆலோசனை கிடைக்கும் வரை பிள்ளையானை விளக்கமறியலில் வைக்க கல்கிசை பிரதம நீதவான் பசன் அமரசேன உத்தரவிட்டார்.

சந்தேக நபரின் சார்பில் முன்னாள் அமைச்சர் மற்றும் வழக்கறிஞர் உதய கம்மன்பில நீதிமன்றில் ஆஜரானார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here