நேற்றைய தேடுதலில் 950 சந்தேகநபர்கள் கைது

0
135

08.01.2024 அன்று 00.30 மணி தொடக்கம் 09.01.2024 00.30 மணி வரையில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது 950 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தடுப்புக் காவல் உத்தரவுகளின் அடிப்படையில் 42 சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 04 சந்தேக நபர்கள் தொடர்பில் சட்டவிரோத சொத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

போதைப்பொருளுக்கு அடிமையான 28 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் விஷேட பணியகத்தின் பதிவு செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பட்டியலில் இருந்த 68 பேர் இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அன்றைய நடவடிக்கைகளின் போது கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் விபரங்கள் கீழே காட்டப்பட்டுள்ளன.

296 கிராம் ஹெராயின்

194 கிராம் ஐஸ்

117 கிலோ 421 கிராம் கஞ்சா

41767 கஞ்சா செடிகள்

48 கிலோ 140 கிராம் அபின்

01 கிலோ 86 கிராம் மாவா

துல் 25 கிராம்

223 போதை மாத்திரைகள்

ஏஸ் 90 கிராம் மதன மோதக வில்லை 77 கிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here