மக்களின் பொதுப் பிரச்சினைகளை பகிரங்கமாகப் பேசினால் பதவியில் இருந்து நீக்கிம் செய்தால் அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யத் தயார் என இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார்.
மக்கள் வரிசையில் நிற்கக் கூடாது என்றும், இதுபோன்ற விஷயங்களைப் பார்த்தும் பார்க்காதது போல இருக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
அரசாங்கத்தை விமர்சிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் ஊடாகவே பொது மக்களின் குரல்கள் வெளிவருவதாகவும் எனவே அந்த விமர்சனங்களை கவனமாக செவிமடுக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்பிக்க சர்வதேச நாணய நிதியத்திற்கு (IMF) நாடு செல்ல வேண்டும் என்று கூறிய அவர், பிரச்சனைகள் தீர்க்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் வீதியில் இறங்க முடியாது என்றும் கூறினார்.