வற் வரி தொடர்பில் பொய் கூறினால் கடும் நடவடிக்கை

Date:

உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் பதிவு செய்யாமல் வற் வரி செலுத்துவதாக கூறி நுகர்வோரை ஏமாற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சில் நேற்று (09) இடம்பெற்ற விசேட வெட் வரி விழிப்புணர்வு மாநாட்டில் கலந்து கொண்ட போது நிதி இராஜாங்க அமைச்சர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர், நுகர்வோருக்கு போலியான கட்டண சீட்டுக்களை வழங்கி முறைக்கேடாக இலாபம் ஈட்டும் வர்த்தக மாபியாக்களை முற்றாக நிறுத்துவதற்கு சட்டங்கள் கடுமையாக அமுல்படுத்தப்படும்.

இதற்கிடையில், எதிர்காலத்தில் வரி தளத்தை விரிவுபடுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது, இதன் மூலம் நேரடி வரி சதவீதம் 40% ஆக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிட்டார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளர் மீது லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் புகார்

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவின் தனிப்பட்ட செயலாளர் சமீர கல்லாகே, ஒரு புகாரில்...

12 பேருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பு

பொலன்னறுவை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது...

அமரகீர்த்தி கொலை வழக்கின் தீர்ப்பு இன்று

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர்...

மேலதிக வகுப்பு, கருத்தரங்க, செயலமர்வு நடத்த தடை

2025 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை...