ஆபிரிக்காவில் விபத்தில் சிக்கியது இலங்கை விமானப்படை ஹெலிக்கொப்டர்

Date:

மத்திய ஆபிரிக்க குடியரசில் அமைதிகாக்கும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இலங்கை விமானப்படையின் ஹெலிக்கொப்டர் ஒன்று சிறிய விபத்து காரணமாக சேதமடைந்துள்ளது.

தொலைதூர பகுதியொன்றில் உள்ள ஓடுபாதையில் தரையிறங்குவதற்கான முயற்சிகளின் போது எம்ஐ17 போக்குவரத்து ஹெலிக்கொப்டர்சேதமடைந்துள்ளது

எனினும் ஹெலிக்கொப்டரிலிருந்து இலங்கையை சேர்ந்தவர்கள் எவரும் காயமடையவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

விபத்து குறித்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவித்துள்ள இலங்கை விமானப்படை பேச்சாளர் ஹெலிக்கொப்டருக்கு ஏற்பட்டுள்ள சேதம் குறித்து முழுமையான விபரங்கள் தெரியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

NDB விவகாரம்: இலங்கை வங்கி சூழலுக்கு கவன எச்சரிக்கை

இலங்கையின் நிதியியல் அமைப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நேஷனல் டெவலப்ப்மென்ட் வங்கி...

மீன்பிடி படகுகளுக்கு எரிபொருள் மானியம்

மீன்பிடி படகுகளுக்கு எரிபொருள் மானியம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.  இதன்படி, சிறிய...

Lucky Baskhar திரில்லர் திரைப்படமும் NDB நிதி மோசடியும்!

தேசிய அபிவிருத்தி வங்கி National Development Bank (NDB) வெளியிட்டுள்ள தகவலின்படி,...

இந்தியத் துணை ஜனாதிபதி இலங்கை வருகிறார்

இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை...