எதிர்க்கட்சியின் விமர்சனங்களை அரசு கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை

0
24

– பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க

எதிர்க்கட்சி கூறும் விடயங்களை தற்போதைய அரசாங்கம் பொருட்படுத்துவதில்லை என்றும், எதிர்க்கட்சியின் விருப்பத்திற்கு ஏற்ப நாட்டை ஆட்சி செய்வதற்காக மக்கள் தமக்கு அதிகாரத்தை வழங்கவில்லை என்றும் தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி இன்னும் பழைய அரசியல் முறையிலேயே செயற்பட்டு வருவதாகவும், 2022ஆம் ஆண்டுக்குப் பின்னர் நாட்டின் அரசியல் சூழலும் அரசியலும் மாற்றமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாடு முழுவதும் புதிய திட்டங்கள் பல ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், முன்னைய காலங்களில் இடைநிறுத்தப்பட்டிருந்த திட்டங்களை மீண்டும் ஆரம்பித்துள்ளதாகவும் கூறினார். குறிப்பாக சூரிய சக்தியை சேமிக்கும் பேட்டரி கட்டமைப்புகளை நாடு முழுவதும் நிறுவும் திட்டங்கள் மற்றும் இடைநிறுத்தப்பட்டிருந்த அதிவேக நெடுஞ்சாலைத் திட்டங்கள் மீண்டும் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

எனினும், அரசாங்கத்தின் குறைபாடுகள் தொடர்பில் எதிர்க்கட்சி முன்வைக்கும் ஆக்கபூர்வமான விமர்சனங்களை ஏற்றுக்கொண்டு அவற்றை கவனத்தில் கொள்ள அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here