3 கோடி பெறுமதி தங்க நகைகளுடன் தொழிலதிபர் கைது.!

Date:

ரூபாய் 3 கோடியே 65 லட்சத்து 19 ஆயிரத்து பெறுமதியான தங்க நகைகளை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவந்து, கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக வெளியேற்ற முற்பட்ட இலங்கை பயணி ஒருவர் விமான நிலைய போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் கண்டி, பல்லேகல பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய தொழிலதிபர் ஆவார்.

இவர் (10/03) காலை 09.30 மணியளவில் டுபாயிலிருந்து எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK-650 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இதன்போது, அவர் தனது உடலில் 04 பார்சல்களாக மறைத்து வைத்திருந்த 996 கிராம் எடையுடைய தங்க நகைகளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

பின்னர், இது தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக குறித்த பயணியும் அவரால் கொண்டு வரப்பட்ட தங்க நகைகளும் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

(04) அதிகாலை 04.45 மணி வரை இது தொடர்பான முறைப்படியான சுங்க விசாரணை நடைபெற்றதுடன், இதன்போது இந்த தங்க நகைகளை அரசாங்கத்திற்கு உரித்தாக்கவும், குறித்த பயணிக்கு 37 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கவும் உத்தரவிடப்பட்டது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வாழ்க்கைச் செலவு மற்றும் வரிச்சுமைக்கு எதிராக போராட்டம் – 6 பேர் கைது

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் அதிக வரிச்சுமைக்கு எதிராக மக்கள் போராட்ட...

அஹுங்கல்லையில் 74 வயது நபர் மீது துப்பாக்கிச் சூடு

அஹுங்கல்லை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்வெஹெர பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்த நபரை...

ஞானசார தேரர் கைது

நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பூஜ்ஜிய கலகொடஅத்தே ஞானசார தேரர், தினியாவல பகுதியில்...

எதிர்க்கட்சியின் விமர்சனங்களை அரசு கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை

– பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க எதிர்க்கட்சி கூறும் விடயங்களை தற்போதைய...