லொக்கு பெட்டியின் சகோதரர் சுட்டுக் கொலை

0
29

அஹுங்கல்லை, வெலிகந்த பகுதியில் இன்று (01) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இரவு சுமார் 8.10 மணியளவில், அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் 9mm ரக துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்தி இந்தக் கொலையை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் லந்துவாஹந்தி சுகத் நுவன் குமார டி சில்வா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் “லொக்கு பெட்டி” என அழைக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுபவராகக் கருதப்படும் நபரின் சகோதரர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அஹுங்கல்லை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here