யாழ். மாநகர மேயர் வேட்பாளராக வித்தியாதரனை களமிறக்குகின்றது தமிழரசுக் கட்சி

Date:

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான மேயர் வேட்பாளராக சிரேஷ்ட ஊடகவியலாளர் நடேசபிள்ளை வித்தியாதரனைக் களமிறக்குவதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது.

வேட்புமனுத் தாக்கலுக்கு முன்னர் ‘காலைக்கதிர்’ நாளிதழின் பிரதம ஆசிரியர் பொறுப்பிலிருந்து அவர் விலகவுள்ளார் எனத் தெரியவருகின்றது.

மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிகாலத்தில் – கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராகப் பதவி வகித்த காலகட்டத்தில், இவர் வெள்ளை வானில் கடத்தப்பட்டு, சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டார். அதன்பின்னர் சிறைத் தண்டனையும் அனுபவித்தார்.

தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளைக்குப் புத்துயிர் கொடுக்க முன்னின்று செயற்பட்டவர் இவர்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளர் மீது லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் புகார்

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவின் தனிப்பட்ட செயலாளர் சமீர கல்லாகே, ஒரு புகாரில்...

12 பேருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பு

பொலன்னறுவை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது...

அமரகீர்த்தி கொலை வழக்கின் தீர்ப்பு இன்று

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர்...

மேலதிக வகுப்பு, கருத்தரங்க, செயலமர்வு நடத்த தடை

2025 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை...