மூன்றாம் தவணைக்கான பாடசாலை ஆரம்பிக்கும் திகதி பிற்போடப்பட்டது

Date:

அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான இறுதிக் கட்டம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை பாடசாலை விடுமுறை கடந்த டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி முதல் 2024 பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதிவரை வழங்கப்பட்டிருந்தது.

எனினும் உயர்தர விவசாய விஞ்ஞான வினாத்தாளின் பகுதி 1 மற்றும் பகுதி 2 ஆகியவற்றை இவ்வருடம் மீள நடத்துவதற்கு பரீட்சை திணைக்களம் எடுத்த தீர்மானம் காரணமாக, பாடசாலை தவணை ஆரம்பிக்கும் திகதி தற்போது மாற்றப்பட்டுள்ளது.

விவசாய விஞ்ஞான வினாத்தாள் இரண்டாம் பாகம் வௌிப்படுத்தப்பட்டதை அடுத்து அதனை ரத்து செய்ய பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்தது.

பின்னர் வினாத்தாளின் முதலாம் பாகத்தை இரத்து செய்யவும் தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, இந்த ஆண்டுக்கான விவசாய வினாத்தாளின் இரண்டாம் பகுதி பெப்ரவரி 1ஆம் திகதி வியாழக்கிழமை காலை 08.30 முதல் 11.40 வரை மீண்டும் நடைபெற உள்ளது.

முதல் பாகம் அதே நாள் பிற்பகல் 01.00 மணி முதல் 03.00 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

உலக வங்கி – இலங்கை அரசாங்கம் இடையே ஐந்தாண்டு திட்டம் கைச்சாத்து

உலக வங்கி குழுமமும், இலங்கை அரசாங்கமும் இணைந்து புதிய ஐந்தாண்டு கூட்டாண்மை...

பிள்ளையான் விளக்கமறியலில்

கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதல்வர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) வழக்கு தீர்ப்பு...

இந்தோனேசிய கடற் பகுதியில் பாரிய நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் வடக்கு மொலுகா கடற்பகுதியில் 7.4 மெக்னிடியூட் அளவில் பாரிய நிலநடுக்கம்...

IMF ஒப்பந்தம் காரணமாக மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியாது

சர்வதேச நாணய நிதியம் (IMF) உடன் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தத்தின் காரணமாக, 2028...