தேர்தலை நடத்தாமல் ஜனாதிபதி அல்லது அரசாங்கத்தின் பதவிக் காலத்தை நீடிப்பதில் ஆளும் கட்சிக்கு விருப்பமில்லை என விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கம்பஹாவில் நேற்று (22) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, இது குறித்து அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மேலும் கூறுகையில்,
“இல்லை, அப்படி எதுவும் இல்லை. சரியான நேரத்தில் தேர்தல் நடத்துவோம். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரின் அரசியல் வரலாற்றில், தேர்தலை பிற்போடவோ அல்லது நீடிக்கவோ எங்களுக்கு எந்த தேவையும் இல்லை. அடுத்த 3 ஆண்டுகளுக்கு மக்களுக்கு நீதி வழங்குவதற்காக அரசாங்கம் என்ற வகையில் நாங்கள் பணியாற்றுவோம்.
அதனால் ஆட்சி காலத்தை மேலும் நீட்டிக்க விரும்பவில்லை” என்றார்.