சிலரை 20 வருடமா திருத்த முயன்றும் முடியவில்லை – சுமந்திரன் பேச்சு

Date:

20 வருடாமாக கூட இருந்தவர்களை நல் வழிப்படுத்த எடுத்த முயற்சியிலும் நாம் தோல்வி அடைந்து விட்டோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

தமிழ் ஆயுதக் குழுக்கள் பல கூட்டமைப்புடன் இணைந்திருந்த காலத்தில் பேசாதிருந்துவிட்டு தற்போது அவர்கள் தொடர்பில் குறை கூறுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றதே என ஊடகவியலாளர்கள்  எழுப்பிய கேள்வியின்போதே மேற்கண்டவாறு பதிலளித்தார்.

சாவகச்சேரியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இது தொடர்பில் மேலும் விபரம் தெரிவிக்கையில்,

இணைந்திருந்த காலத்திலும் நான் பல தடவை கூறியுள்ளேன் இப்போதும் கூறுகின்றேன்.  எந்தச் சந்தியிலும் நின்று எவனையும் காட்டிக் கொடுக்கவில்லை. எங்கையும் முகத்தை மூடிக்கொண்டுபோய் தலையாட்டவில்லை. தூள் கடத்தவில்லை. இவ்வாறானவர்களும் இணைந்திருந்தனர். அதன்போதும் நான் இதனை பகிரங்கமாக கூறியுள்ளேன் அதனை இப்போதும் கூறுகின்றேன். இவ்வாறு தலையாட்டிய பழக்கதோசம் இன்றும் விட்டுப்போகவில்லை.

இதேநேரம் அதில் ஒருவர் 80 ஆம் ஆண்டு இதனைச் சாதித்தோம், 1985இல் இதனைச் சாதித்தோம் 1987இல், 1989, 1994 இல் 2001,இல் 2004இல் இதனைச் தாதித்தோம் என வரலாற்றுப்  பட்டியலிடுகின்றார். அதே பட்டியலில் எத்தனையாம் ஆண்டுகளில் யாரைப் போட்டுத் தள்ளினோம், எத்தனொயாம் ஆண்டு அரச கூலிப்படையாக சேர்ந்தியங்கினோம் என்றதனைக்கூற மறந்துவிட்டார் என்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வெளியானது வெட்டுப்புள்ளி

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப்...

இந்திய துணை ஜனாதிபதியுடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனை இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்...

இன்று நுகேகொடையில் பாரிய பேரணி

பல அரசியல் கட்சிகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு பேரணி இன்று...

40 மில்லியன் மதிப்புள்ள “குஷ்” போதைப்பொருள் கடத்திய மூவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு, விமான நிலையத்திற்கு வெளியே...