ஆசிரியை மீது பாலியல் வன்கொடுமை முயற்சி – மொட்டுக் கட்சி முக்கியஸ்தர் கைது

Date:

39 வயதுடைய பெண் ஆசிரியையை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஹொரண பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொரகஹஹேனவில் உள்ள கடையொன்றுக்கு சென்று கொண்டிருந்த போது லொறியில் வந்த முன்னாள் பொதுஜன பெரமுன உறுப்பினர் அதிலிருந்து இறங்கி அவரை கட்டிப்பிடித்து பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அப்போது சந்தேக நபரின் பிடியில் இருந்து தப்பி அருகில் உள்ள வீட்டை நோக்கி ஆசிரியை ஓடியுள்ளார்.

119 அவசர தொலைபேசி இலக்கத்திற்கு செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து குறித்த பெண் ஹொரண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அரசியல்வாதிக்கும் பெண் ஆசிரியருக்கும் நிதி விவகாரம் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் ஹொரணை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் பெப்ரவரி 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கம்பஹா ஒஸ்மண்ட் கைது

கணேமுல்ல சஞ்சீவ என்பவரைக் கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் 'கம்பஹா...

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடிக்கிறது

இலங்கைக்கு வடகிழக்கே நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும்...

கொழும்பில் பலமிழக்கும் எதிர்கட்சி!

கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களில் மூவர் இனிமேல் சுயாதீனமாக செயல்படுவதாக அறிவித்துள்ளனர். இவ்வாறு...

பலத்த மழை குறித்த எச்சரிக்கை

கடந்த 22 மணித்தியாலங்களில் நாட்டின் அதிகூடிய மழைவீழ்ச்சியாக 204 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி...