வியாழேந்திரன் மீதான வழக்கு ஒத்திவைப்பு !

Date:

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்குவந்த காலம் தொடக்கம் பல கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது. ஆனால் இன்று குற்றச்சாட்டுகளை முன்வைத்துவரும் எதிர்க்கட்சிதான் அன்று ஆட்சியிலிருந்தபோதும் தெரிந்திருந்தும் தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லையென இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் உட்பட ஆறு பேர் மீதான வழக்கு ஏப்ரல் 04ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டது.சீயோன் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு அன்று நடைபெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலின் சூத்திரதாரியின் தலை கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைக்கப்பட்ட நிலையில் அதற்கு எதிராக மக்களினால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்த வியாழேந்திரன் உட்பட ஆறு பேருக்கு எதிராக மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரினால் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல்செய்யப்பட்டிருந்தது.இது தொடர்பான வழக்கு இன்று (07)மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.குறித்த வழக்கினை ஏப்ரல் 04ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இதன்போது இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

முன்னாள் மூத்த அமைச்சர் இந்த வாரம் கைது!

இந்த வாரம் மற்றொரு முன்னாள் மூத்த அமைச்சர் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவால்...

ரணில் மீண்டும் கைது?

ராஜகிரிய பகுதியில் விவசாய அமைச்சகத்திற்காக பல மாடி கட்டிடத்தை வாடகைக்கு எடுத்ததில்...

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள புதிய அறிக்கை

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, 2025 அக்டோபரில் இலங்கைக்கு...

300 கிலோ ஹெரோயினுடன் இலங்கை மீனவர்கள் கைது

ஹெரோயின் போதைப்பொருள் 300 கிலோவுடன் இலங்கை மீனவர்கள் அறுவர் மாலைதீவு பொலிஸாரால்...