முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சுமார் 3 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னாள் ஜனாதிபதியின் வீட்டுக்குச் சென்று பின்வரும் வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர்.
போராட்டத்தின் போது ஜனாதிபதி மாளிகையை போராளிகள் கைப்பற்றிய போது அங்கு கிடைத்த ஒரு கோடியே எழுபது இலட்சம் ரூபா பணம் தொடர்பானது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அறையில் கண்டெடுக்கப்பட்ட இந்த பெரும் தொகை செயற்பாட்டாளர்களினால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த விசாரணைகளை மேற்கொள்ளவே அவரிடம் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
N.S