தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரியவும் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவாக இருப்பதாக அறிவித்துள்ள நிலையில், அது தொடர்பில் மேலும் பேசுவது நல்லதல்ல என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் கொழும்பில் நடைபெற்ற கம்பஹா மாவட்ட பொதுஜன பெரமுனவின் வழிநடத்தல் குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் மேலும் கூறியதாவது,
13வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவாக இருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி நாட்டு மக்களை கொன்று நாட்டையே அழித்த கட்சி. நாங்கள் வன்முறையற்ற கட்சி. நாங்கள் மக்களைக் கொன்ற கட்சியல்ல.
அனுரகுமார ஏற்கனவே ஜனாதிபதி உடையை அணிந்துள்ளார். பேஸ்புக்கின் தலைவராகவும் உள்ளார். ஜனாதிபதி என்று நினைத்துக்கொண்டு நடக்கிறார், பேசுகிறார். அவர் கனவு கண்டாலும் மக்கள் இதயத்தின் ஜனாதிபதியாக வர முடியாது.அதனாலேயே அனுரகுமாரவை அந்த கனவை தொடர சொல்கிறோம்.
இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு முன்பு இருந்த நிலையை விட இப்போது இருக்கும் நிலைமை நன்றாக இருக்கிறது. உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இப்படி இருந்தாலும் கூட்டங்களை நடத்தி மக்களிடம் செல்ல வேண்டும்.
N.S