விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் நக்கல் பதிவு!

0
9

சுகத் திலகரத்ன அவர்கள் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சராகப் பதவியேற்று நேற்று (22) இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

2024 நவம்பர் 21ஆம் திகதி விளையாட்டுத்துறை பிரதி அமைச்சராக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட அவர், அதற்கு மறுநாள் கொழும்பில் அமைந்துள்ள விளையாட்டுத்துறை அமைச்சில் உத்தியோகபூர்வமாகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

இந்நிலையில், இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்தமை தொடர்பாக சுகத் திலகரத்ன நேற்று தனது பேஸ்புக் கணக்கில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த பதிவுடன் அவர் தனது மனநிலை கவலையாக இருப்பதாகவும் (Feeling sad) குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, பதிவின் இடையில் சத்தமாகச் சிரிக்கும் 🤣 என்ற எமோஜியையும் இணைத்துள்ளார்.

இதன் மூலம், கவலைக்கு மத்தியிலும் தற்போதைய நிலைமை நகைச்சுவையானதாக மாறியுள்ளதைக் குறிப்பிடுகிறாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவான சுகத் திலகரத்ன, இலங்கை நாடாளுமன்றத்திற்குத் தெரிவான முதலாவது ஒலிம்பிக் மட்டத்திலான விளையாட்டு வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here