பணம் பெற்று சமூக ஊடகங்களில் சேறு பூசிய நபர் கைது

0
145

சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பிய ஒருவரை குற்றப் புலனாய்வு திணைக்களம் கைது செய்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

குறித்த சந்தேக நபர் அரசியல்வாதி ஒருவரின் ஆதரவுடன் இந்த அவதூறான பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் மேலும் கூறுகிறார்.

பாணந்துறை பிரதேச சமூக பொலிஸ் குழு உறுப்பினர்களை அறிவிக்கும் நிகழ்ச்சி பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தலைமையில் இடம்பெற்றதுடன், அந்த நபரின் பெயர் எதிர்காலத்தில் வெளியிடப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here