வளைகுடா உறுப்பு நாடுகளுக்கும் இலங்கைக்கும் இடையே வர்த்தகம்

Date:

சவூதி அரேபிய இராச்சியத்திற்கான இலங்கைத் தூதுவர் பி.எம். அம்சா வளைகுடா ஒத்துழைப்புப் பேரவையின் செயலாளர் நாயகம் மாண்புமிகு கலாநிதி. நயீப் பலாஹ் எம். அல் ஹஜ்ரப் அவர்களை 2022 பிப்ரவரி 08ஆந் திகதி ரியாத்தில் உள்ள பேரவையின் தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.

சுமூகமான இந்த சந்திப்பின் போது, வளைகுடா ஒத்துழைப்புப் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கும் இலங்கைக்கும் இடையே வர்த்தகம், வளைகுடா ஒத்துழைப்புப் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கும் இலங்கைக்கும் இடையே வர்த்தகம், வேலைவாய்ப்பு, சுற்றுலா மற்றும் முதலீடுகளை விரிவுபடுத்துவது முதலான பரஸ்பர நலன்கள் குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடினர்.

இலங்கை மற்றும் வளைகுடா ஒத்துழைப்புப் பேரவையின் நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், இலங்கைக்கும் வளைகுடா ஒத்துழைப்புப் பேரவைக்கும் இடையே கட்டமைப்பு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் தூதுவர் மற்றும் செயலாளர் நாயகம் ஆராய்ந்தனர்.

இலங்கைத் தூதரகம்,ரியாத்

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அர்ச்சுனா எம்பி பிணையில் விடுவிப்பு

யாழ்ப்பாணம், பெரியவிளான் பகுதியில் இடம்பெற்ற காணித் தகராறின் போது, பெண் ஒருவரைத்...

600,000 அமெரிக்க டொலர் மாயம்! விசாரணை தீவிரம்!!

இலங்கைத் அஞ்சல் திணைக்களத்தினால் அமெரிக்கத்அஞ்சல் சேவைக்கு வழங்கப்பட்ட பணத்தில் மேலும் 600,000...

மீண்டும் மின்சார கட்டண உயர்வு

இலங்கையில் மீண்டும் மின்சார கட்டண உயர்வு தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நடைபெற்று...

இலங்கை கிரிகெட்டுக்கு யார் அடுத்த தலைவர்?

இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் முக்கிய மாற்றம் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை கிரிக்கெட்...