முல்லைத்தீவில் விபத்து : 4 இராணுவத்தினர் உள்ளிட்ட 6 பேர் காயம்

Date:

இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் செந்தமான பஸ் ஒன்றும் இராணுவத்தினரின் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொக்காவில் பகுதியில் ஏ-9 வீதியில் திங்கட்கிழமை மாலை குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

துணுக்காயிலிருந்து காரைநகர் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் செந்தமான பஸ் எதிரே பயணித்த இராணுவ ட்ரக் வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியுள்ளது.

விபத்துக்குள்ளான இராணுவ வாகனம் குடைசாய்ந்ததில் 4 இராணுவத்தினர் காயமடைந்துள்ளதுடன், பேருந்தில் பயணித்த பெண் ஒருவரும் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பஸ்ஸை செலுத்திய சாரதியும் காயங்களுடன் மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் குறித்த சாரதி பொலிசாரால் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

குறித்த விபத்து தொடர்பில் மாங்குளம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

NDB விவகாரம் CID அலசல்!

நம்பகமான தகவல்களின் படி, தேசிய அபிவிருத்தி வங்கி பிஎல்சி (NDB)யில் இடம்பெற்றதாக...

மன்னிப்பே கிடையாது!

தனது சொத்து மற்றும் கடன் அறிக்கைகள் தொடர்பாக பொய்யான செய்திகளை வெளியிட்ட...

குண்டுத் தாக்குதல்கள் கதை பொய்

கொழும்பு உள்ளிட்ட நெரிசலான பகுதிகளில் குண்டுத் தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடத்தத் தயாராக...

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர கைது

சொக்கா மல்லி என அழைக்கப்படும் இரத்தினபுரி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்...