தேர்தல்கள் ஆணைக்குழுவின் அழைப்பின் பேரில் பதிவு செய்யப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் எதிர்வரும் 24ம் திகதி விசேட கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்னும் சில மாதங்களில் தேர்தலை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணைக்குழு விரைவில் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலை இலக்காகக் கொண்டு பிரபலங்களைத் தேடும் நடவடிக்கையை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் முன்னெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சமீபகாலமாக பல முக்கிய பிரமுகர்களுக்கு தேர்தல் அரசியலுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.
இவ்வருடம் நடைபெறவிருந்த உள்ளுராட்சி சபைத் தேர்தல் ஒரு வருடத்தினால் பிற்போடப்பட்டு மாகாண சபைத் தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாகாண சபைகளின் பதவிக்காலம் நிறைவடைந்து பல வருடங்களாகியும் இதுவரை தேர்தல் நடத்தப்படவில்லை.
எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.