உள்ளூராட்சி நிறுவனங்களின் உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூன் 2, 2025 முதல் தொடங்க வேண்டும் என்று கூறி ஒரு அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வர்த்தமானி அறிவிப்பை பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன வெளியிட்டுள்ளார்.
27 மாநகர சபைகள், 36 நகர சபைகள் மற்றும் 274 பிரதேச சபைகளின் உறுப்பினர்களின் பதவிக்காலம் சம்பந்தப்பட்ட திகதியிலிருந்து தொடங்க உள்ளது.