மருதானை டெக்னிக்கல் சந்திக்கு அருகில் ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைகளை பிரயோகித்துள்ளனர்.
2023 உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் மேற்கொண்டதாகக் கூறப்படும் முயற்சிகளுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் இந்த எதிர்ப்பு ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதேவேளை, ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பு, கோட்டையில் உள்ள ஓல்கொட் மாவத்தை பொலிஸாரால் முற்றாக மூடப்பட்டுள்ளது.
எனவே போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேர்தலை ஒத்திவைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, பாதசாரிகள் அல்லது வாகனப் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில், ஐக்கிய மக்கள் சக்திபாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு தடை விதித்து கொழும்பு கோட்டை நீதவான் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஜனாதிபதி அலுவலகம், ஜனாதிபதி மாளிகை, நிதி அமைச்சின் வளாகம் அல்லது காலி முகத்திடல் பகுதிக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைவதையும் இந்த உத்தரவு தடுக்கிறது.
N.S