உள்ளூராட்சி தேர்தலுக்கு எதிரான மனுவை ஒத்திவைத்த உயர்நீதிமன்றம்!

Date:

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்குமாறு கோரி ஓய்வு பெற்ற இராணுவ கேணல் டப்ளியூ எம்.ஆர் விஜேசுந்தரவால் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனு மீதான பரிசீலனையை எதிர்வரும் மார்ச் மாதம் 11 ஆம் திகதி வரை ஒத்தி வைக்க உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.

எஸ்.துரை ராஜா, ஏ. எச். எம். டி. நவாஸ் மற்றும் ஷிரான் குணரத்ன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன் இந்த மனுக்கள் இன்று பரிசீலிக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் இந்த சந்தர்ப்பத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படுவதால் மக்களுக்கு எந்தவித நன்மையும் ஏற்படப்போவதில்லை என சுட்டிக்காட்டும் மனுதாரர், தேர்தலை பிற்போடும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரியே குறித்த மனுவை தாக்கல் செய்திருந்தார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மே மாதத்தில் தேசிய பணவீக்கம் 5.4% ஆக உயர்வு

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் (NCPI) அடிப்படையில், 2026 மே மாதத்தில்...

இலங்கை மீது இந்தியா அதிருப்தியில்!!

இந்தியாவுடன் எட்டப்பட்ட ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துவதில் தாமதம்; இந்தியா அதிருப்தியில் இருப்பதாக தகவல் இலங்கை...

எரிபொருள் விலையில் மாற்றம் செய்ய வாய்ப்பில்லை

தற்போது இலங்கையில் நடைமுறையில் உள்ள எரிபொருள் விலையில் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றம்...

கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குறித்த சர்ச்சை தொடர்கிறது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் மற்றும் கர்தினால் தொடர்பான விமர்சனங்கள் உயிர்த்த ஞாயிறு...