Sunday, January 19, 2025

Latest Posts

ஆயிரக்கணக்கான பிளமிங்கோ பறவைகள்!

தனுஷ்கோடி மற்றும் ராமேஸ்வரம் பகுதிகளில் 40 நாட்களுக்கு பின் காலதாமதமாக பிளமிங்கோ பறவைகள் வலசை வந்துள்ளது. கடல் மாசுபாடு மற்றும் கடல் நீர் தரம் குறைவதால் பறவைகளின் வருகை குறைந்து வருவதாக பறவைகள் ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி செல்லும் பாதையில் அமைந்துள்ளது. கோதண்ட ராமர் கோயில் கடற்கரைப்பகுதி அருகே அமைந்துள்ள கடல் நீர் மற்றும் மழைநீர் தேங்கும் பகுதிக்கு ஐரோப்பிய கண்டத்தில் இருந்து பிளமிங்கோ பறவைகள் வருடந்தோறும் டிசம்பர் மாதம் இறுதி முதல் ஜனவரி மாத இறுதிவரை உணவு தேடி வந்து செல்லும் .

இங்குள்ள சதுப்பு நிலப்பகுதியில் வாழும் கடல் வாழ் உயிரினங்களை உணவாகக் கொண்டு வாழ்ந்து வரும் பிப்ரவரி தொடக்கத்தில் தமிழகத்தில் உள்ள சரணலாயங்களுக்கு செல்லும். ஆனால் இந்த ஆண்டு 40 நாட்கள் கால தாமதமாக பிளமிங்கோ பறவைகள் வலசை வந்துள்ளது.

வலசை வரும் பிளமிங்கோ பறவைகள் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து ராமேஸ்வரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக வந்து பறவைகள் உணவு தேடும் அரிய காட்சிகளை கண்டு ரசித்து வருகின்றனர்.

இந்நிலையில் பருவநிலை மாற்றம் மற்றும் சமூக விரோதிகள் வேட்டையாடி வந்ததால் கடந்த இரண்டு வருடங்களாக பிளமிங்கோ பறவைகள் வரத்து தடைப்பட்டது.

இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்து வந்த நிலையில் இந்த ஆண்டு வலசை வரும் பறவைகள் கடந்த அசல் நாட்களாக வந்த வண்ணம் உள்ளது.

இது குறித்து பறவைகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டவர்கள் கூறுகையில் இந்த ஆண்டு 40 நாட்களுக்குப் பிறகு தனுஷ்கோடி பகுதிக்கு பிளமிங்கோ பறவைகள் வலசை வந்துள்ளது. தொடக்கத்தில் 400 பறவைகள் வந்த நிலையில் தற்போது 4 ஆயிரத்திற்கும் உட்பட்ட பறவைகள் குஜராத் மாநிலத்தில் இருந்து தனுஷ்கோடி பகுதிக்கு வந்த வண்ணம் உள்ளது.

பிளமிங்கோ பறவைகள் ஆண்டுதோறும் ஒரு வார காலம் இங்கு வலசை வருவதற்கான முக்கிய காரணம் பறவைகளுக்கு தேவையான உணவுக்காக மட்டும்மே இப்பகுதிக்கு வலசை வருகிறது.

இந்த ஆண்டு கால தாமதமாக வந்ததற்கு நீர் மாசுபாடு மற்றும் ராமேஸ்வர பகுதியில் இருந்து வெளியேறும் கழிவு நீர் கடலில் கலப்பதால் தண்ணீரின் பி .எச் .அளவு குறைந்தால் பறவைகள் உண்ணக்கூடிய பாசி வகைகள் உற்பத்தி ஆகாததால் வலசை வரும் பிளமிங்கோ பறவைகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு குறைந்துள்ளது.

தனுஷ்கோடி சுற்றுலா தளமாகவும், ஆன்மீக தலமாக மட்டுமே மக்கள் பார்த்து வரும் நிலையில் தனுஷ்கோடி பல்லுயிர் பெருக்கத்திற்கான முக்கிய இடமாக இருப்பதால் அதனை பாது காத்தால் மீன்களின் வளம் பெருகி மீனவர்கள் வாழ்வாதாரம் அதிகரிக்கும்.

எனவே இந்த பகுதியை பாதுகாக்க மக்கள் வனத்துறையுடன் இணைந்து கடலில் மாசுபடுவதை நீர் மாசுபடுவதை யும் தடுக்க வேண்டும் என பறவைகள் ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.