முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது என சிலுவையில் அடித்து சத்தியம் செய்ய வேண்டிய அவசியமில்லை எனவும் சட்டத்தின் முன் வந்து தான் நிரபராதி என நிரூபிக்க முடியும் எனவும் அருட்தந்தை சிறில் காமினி வலியுறுத்தியுள்ளார்.
பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சட்டத்தின் முன் இந்தப் பிரச்னைகள் தீர்க்கப்பட வேண்டும் எனவும் தாக்குதல் தொடர்பான விசாரணை ஆணைக்குழு அறிக்கையில் சுமார் 30 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ள போதிலும், அந்த பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பது கேள்விக்குறியாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறானதொரு பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி சத்தியம் செய்யாமல் சட்டத்தின் முன் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க வேண்டும் என அருட்தந்தை சிறில் காமினி குறிப்பிட்டுள்ளார்.