எமது தாயின் நிலை இனிமேலாவது எந்தத் தாய்க்கும் வராமலிருக்கட்டும்: சாந்தனின் சகோதரன் மதி சுதா உருக்கமான பதிவு

0
152

“இறுதியாக இந்த ஒன்றரை வருடமாகப் போராடியும் அண்ணனை என்னால் மீட்க முடியவில்லை. அண்ணாவின் மரணச் செய்தியை அம்மாவிடம் சேர்ப்பதற்கு 2 நாட்களாவது எனக்குத் தேவைப்படுகின்றது.

அதுவரை அம்மாவைத் தனிமையில் வைத்திருக்கின்றேன். என் தாயின் நிலை இனிமேலாவது எந்தத் தாய்க்கும் வராமலிருக்கட்டும்.”

  • இவ்வாறு மறைந்த ஈழத் தமிழன் சாந்தனின் சகோதரன் மதி சுதா, உருக்கமான கருத்துக்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுதலையான சாந்தன் என்றழைக்கப்படும் சுதேந்திரராஜா (வயது 55) நேற்று திடீரென உயிரிழந்தார்.

கல்லீரல் பாதிப்பால் சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்றிரவு இலங்கை வரவிருந்த நிலையிலேயே காலை 7.50 மணியளவில் மாரடைப்பால் காலமானார்.

சாந்தன் நாடு திரும்பவிருந்த நிலையில் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தமை அவரின் குடும்பத்தை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

விழிநீரைப் பெருக்கெடுக்க வைத்துள்ளது. இந்நிலையில், அவரின் சகோதரன் மதி சுதா மேற்கண்டவாறு உருக்கமான பதிவை இட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here