வருகிறது தேசிய அரசாங்கம், பிரதமராகிறார் ரணில்! தமிழ் கூட்டமைப்புக்கும் அமைச்சு பதவி!!

0
482

எதிர்வரும் சிங்கள தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஏனைய கட்சிகள் இணைந்து தேசிய அரசாங்கம் அமைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்காலத்தில் இவ்வாறு தேசிய அரசாங்கம் அமைக்கப்படும் என லங்கா நியூஸ் வெப் நாம் பல மாதங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தோம்.

தற்போது நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சர்வதேசத்தின் பாரிய உதவிகள் அவசியமான சூழலில் இவ்வாறான சர்வதேச ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காகவே இந்த தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க புதிய பிரதமராகவும், பசில் ராஜபக்ஷ நிதி அமைச்சராகவும் நீடிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக ரணில் விக்கிரமசிங்க மாத்திரம் இருக்கின்ற போதிலும், ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இருந்து பிரிந்து செல்லும் சுமார் 15 பேர் கொண்ட குழு தேசிய அரசாங்கத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தேசிய அரசாங்கத்தின் விசேட அம்சமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் மூன்று சக்திவாய்ந்த அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here