ஓரினச்சேர்க்கை நடத்தையை குற்றமாக்குவதை நீக்கும் திருத்தச்சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

0
204

ஓரினச்சேர்க்கை நடத்தையை குற்றமாக்குவதை நீக்க முன்மொழியும் தனியார் உறுப்பினர் திருத்தச்சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி.டொலவத்தே முன்வைத்த திருத்தச்சட்டமூலமானது தண்டனைச் சட்டத்தில் திருத்தங்களை முன்மொழிகிறது, இதன் மூலம் பாலியல் சார்பு அடிப்படையில் குற்றப்படுத்துதலை நீக்குகிறது.

இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால், இலங்கையில் ஒரே பாலின நடத்தையை குற்றமற்றதாக மாறும்.

பல தசாப்தங்களாக, தண்டனைச் சட்டத்தின் 365 / 365A பிரிவுகள் LGBTIQ மக்களை துன்புறுத்துவதை அனுமதிக்கும் விதிகளாக விளக்கப்பட்டுள்ளன.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here