சஜித் மீது சுமந்திரன் குற்றச்சாட்டு

Date:

அரசியமைப்பின் பிரகாரம் தற்போது ஜனாதிபதித் தேர்தலை நடத்த முடியாது. இந்த விடயம்கூட சஜித் பிரேமதாசவுக்கு தெரியவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “சர்வக்கட்சி மாநாட்டின்போது புலம்பெயர் தமிழர்களின் முதலீடு தொடர்பில் பல தரப்பினரும் கருத்துகளை முன்வைத்தனர்.நாமும் அது தொடர்பில் கதைத்தோம். இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படுமானால் புலம்பெயர் தமிழர்கள் நிச்சயம் உதவுவார்கள் சுட்டிக்காட்டினேன்.

புலம்பெயர் தமிழர்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொடுப்பதற்கான பாலமாக இருப்பதற்கு நாம் தயார்.இலங்கையின் பொருளாதாரத்தைவிடவும் புலம்பெயர் தமிழர்களின் பண பலம் உள்ளது. எனவே, அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தி அதற்கு அப்பாலான அரசியல் தீர்வொன்று வழங்கப்படுமானால் நிச்சயம் உதவி கிட்டும்.ஆனால் அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வே அவசியம்.

மாறாக ஆளுநர் வசம் அதிகாரங்கள் இருக்கக்கூடாது. மக்களால் தெரிவுசெய்யப்படும் பிரதிநிதிகள் வசமே அதிகாரம் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஜனாதிபதிக்கு சிறீதரன் எம்.பி அவசர கடிதம்…!

​பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைக் கலைஞர் கணேஸ்குமார்...

சுரேஷ் சலேவுக்கு ஆதரவாக சத்தியாக்கிரகப் போராட்டம் ஆரம்பம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே மனிதாபிமானமற்ற முறையில்...

திட்வா சூறாவளி உதவி நிதி பாதுகாப்பாக உள்ளது

திட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக கிடைத்த நிதியுதவிகள் அரசுக் கருவூலத்தில்...

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

தெற்கு பிலிப்பைன்ஸின் மிண்டனாவோ பகுதிக்கு அப்பால் இன்று (8) அதிகாலை 7.8...