மொட்டுக் கூட்டணிக்கு பாய் சொல்லத் தயாராகும் காங்கிரஸ்..

0
185

அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான இலங்கை தொழிலாளர் காங்கிரஸும் அரசாங்கத்துடன் தொடர்வதா அல்லது அரசாங்கத்தில் இருந்து விலகுவதா என ஆலோசித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்கத் தலைவர்களுடனான பிரச்சினைகளைக் காரணம் காட்டி, அண்மையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி மாநாட்டில் கலந்து கொள்வதிலிருந்தும் கட்சி விலகியிருந்தது.

தற்போதைய அரசாங்கம் அமையும் போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கு அமைச்சரவை அமைச்சுப் பதவி வழங்குவதாக பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் உறுதியளித்த போதிலும் அவர்களுக்கு இராஜாங்க அமைச்சுப் பதவி மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது.

கட்சியின் தற்போதைய தலைவர் ஜீவன் தொண்டமான் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

நுவரெலியா மாவட்டத்திற்கு இரண்டு அமைச்சரவை அமைச்சுப் பதவிகள் கிடைத்துள்ள போதிலும் அதில் ஒன்று கூட தமது கட்சிக்கு வழங்கப்படவில்லை எனவும் ஜீவன் கூறுகிறார்.

இது குறித்து ஆரம்பம் முதலே அதிருப்தியில் இருந்த அக்கட்சி, அரசாங்க நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில் அமைச்சரவை அமைச்சுப் பதவிக்கான பேச்சுவார்த்தைக்கு தயாராகி வருகின்றது.

அமைச்சரவைப் பதவி வழங்கப்படாவிட்டால் அரசாங்கத்தில் நீடிப்பது குறித்து கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் விரைவில் முடிவெடுக்க உள்ளதாக தெரியவருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here