ஜனாதிபதித் தேர்தல் முன்கூட்டியே நடத்தப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
”ஜனாதிபதித் தேர்தலொன்று நடைபெற்றால் ஜனாதிபதியை ஆதரிக்க பலர் தயாராக உள்ளனர். சில கட்சிகள் மற்றும் தனிநபர்கள் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதியையே ஆதரிப்பார்கள். பொதுஜன பெரமுனரும் ஜனாதிபதிக்கு ஆதரவை வழங்கியுள்ளனர். ஜனாதிபதித் தேர்தலை நாங்கள் பரந்த கூட்டணியாக எதிர்கொள்வோம்” -எனவும் குருநாகலையில் இடம்பெற்ற ஒரு சந்திப்பில் அவர் கூறியுள்ளார்.
N.S