ரணில் வழங்கும் அறிவுரை

Date:

மிரிஹானவில் இடம்பெற்றது இனவாத சம்பவமில்லை, இது பயங்கரவாத சம்பவமில்லை, என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அவ்வாறான இனவாத கருத்துக்களை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

பிரஜைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளிற்கு தீர்வு எதுவும் காணப்படாததால் நேற்றிரவு மிரிஹான பங்கிரிவத்தை ஆர்ப்பாட்டம் வெடித்தது. தற்போதைய அரசியல் கட்டமைப்பின் வீழ்ச்சியே இந்த சம்பவத்திற்கு காரணம் என தெரிவிக்கலாம். இலங்கை பிரஜைகளை வாட்டும் பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பதற்கு அரசாங்கம் தவறியுள்ளது.

எதிர்கட்சியும் தனது பொறுப்பை நிறைவேற்ற தவறியுள்ளது. அரசாங்கம் இந்த சம்பவங்களிற்கு பல தரப்பட்ட குழுக்கள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றது. ஆனால் அவர்கள் தங்கள் குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கான ஆதாரங்களை முன்வைக்க வேண்டும்.

அரசாங்கம் இனவாத கருத்துக்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும், அதேவேளை யார் இந்த வன்முறைகளிற்கு காரணம் என்பதை வெளிப்படுத்த வேண்டும். இது இனவாத சம்பவமில்லை, இது பயங்கரவாத சம்பவமில்லை, அவ்வாறான விதத்தில் கருத்துக்களை தெரிவிப்பது ஏற்கனவே காணப்படும் நிலையை மேலும் தீவிரப்படுத்தும்.

அமைதியான விதத்திலேயே ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன ஆனால் பங்கிரிமாவத்தையில் அந்த நிலை மாற்றமடைந்தது. நான் இது குறித்து மாறுபட்ட கருத்துக்களை தெரிவிக்கின்றேன், அமைதியான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமைக்காக எவரையும் காயப்படுத்தக்கூடாது.

மக்களிற்கு அமைதியாகவும் சுதந்திரமாகவும் போராட உரிமையுண்டு, பொதுமக்களின் ஆர்ப்பாட்டங்களில் அரசியல் கட்சிகள் பங்கெடுக்க கூடாது. ஆனால் அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்துவதற்கான உரிமையுண்டு. தாமதமாகிவிட்டபோதிலும் நாடாளுமன்றத்திற்கும்கடப்பாடு உள்ளது.

பொதுமக்களிற்கு தீர்வை வழங்ககூடிய தீர்வுகளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த நெருக்கடிக்கு வன்முறைகள் இன்றி தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கின்றேன் என கூறியுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ரணிலுகுக்கு எதிரான வழக்கு – விசாரணை புதன்கிழமை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு அடுத்ததாக...

2 மணிக்குப் பின்னர் மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும்...

போதை பொருள் கடத்திய 22 தேரர்கள் கைது! 110 கோடி பெறுமதி “குஷ்” “ஹேஷ்” மீட்பு!

சுமார் 110 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய "குஷ்" மற்றும் "ஹேஷ்"...

வெசாக் விடுமுறை, விசேட வர்த்தமானி

2026ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் உற்சவத்தின் உத்தியோகபூர்வ நிகழ்வு மே மாதம்...