முட்டை விலையை குறைத்தால் வெதுப்பக உற்பத்தி உணவுகளின் விலைகளும் குறையும்!

Date:

முட்டை விலையை ரூ.35 ஆக குறைத்தால் வெதுப்பக உற்பத்திகளின் விலைகளை குறைக்க முடியும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் வருவதால், எதிர்வரும் ஓர், இரு வாரத்திற்குள் முட்டை சந்தையில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் தீர்க்கப்படும்.

உள்ளூர் சந்தையில் முட்டை விலை ஒரு வாரத்திற்குள் குறைய வேண்டும். அவ்வாறு முட்டை விலை குறைந்தால் பராட்டாவை தவிர்ந்து ஏனைய பொருட்களின் விலையை குறைக்க முடியும்.

வெதுப்பகங்கள் மற்றும் ஹோட்டல்களுக்கு இன்னும் ரூ.55 க்கு தான் முட்டை கொள்முதல் செய்யப்படுகிறது. பெரும்பாலான சில்லறை கடைகளில் முட்டை இல்லை. சந்தையில் முட்டை தட்டுப்பாடு நிலவுகிறது.

நாட்டில் எரிபொருள் விலை குறைப்பு காரணமாக மாத்திரம் வெதுப்பக தொழிலில் விலையை குறைக்க முடியாது எனவும் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

புதிய தேர்தல் ஆணையாளர் நாயகம்

புதிய தேர்தல் ஆணையாளர் நாயகமாக ரசிக பீரிஸ் இன்று (14) முதல்...

இந்த வரவு செலவு திட்டத்தை தோண்டத் தோண்ட தங்கம் வரும்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தாக்கல் செய்த 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்,...

இராணுவப் பயன்பாட்டில் உள்ள தனியார் காணிகளை விடுவிக்க நடவடிக்கை

யாழ்ப்பாணம் பலாலி பகுதிகளில் தற்போது இராணுவப் பயன்பாட்டில் உள்ள தனியார் காணிகளை...

இலங்கைக்கு பாம்பு, ஆமை கடத்தும் மர்ம கும்பல்

சென்னையை மையமாக வைத்து, வெளிநாடுகளில் இருந்து அரியவகை உயிரினங்கள் கடத்தப்பட்டு, அவை...